Tamil Sanjikai

பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புகின்றனர், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுகின்றனர்.

பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் திடீர் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. …

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், வரும் 23-ந்தேதி பொறுப்பு ஏற்க உள்ளார். …

நிதி நிறுவன அதிபர் செல்வராஜையும், அவருடைய மனைவியையும் கொன்று புதைத்ததாக செல்வராஜின் உடன் பிறந்த அக்காள் கண்ணம்மாள் மற்றும் கண்ணம்மாளின் மருமகன் சதீஷ் என்கிற நாகேந்திரன் ஆகியோரை வெள்ளகோவில் போலீசார் கைது செய்தனர். …

தனி நாடு கேட்கும் குர்திஷ் இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என கருதுகிறார் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் . குர்திஷ் இனப் போராளிகளை ஒழித்துக்கட்ட தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த …

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச் செயலாளர் …

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து ஓன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். …

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். …

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் தாங்கும் விடுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறியதில் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். …

அமிஷா படேல், குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து . அதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கி இருந்தார்.. …

2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி ஆவார். …

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், துருக்கி அரசாங்கம் தனது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தின. …

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள அமித் ஷா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை மந்திரியானார். …

மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பேர் சமூக பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். …

கடந்த மாதம் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான மூலமாக தாக்குதல்கள் நடைபெற்றது. இதற்கு தாக்குதலுக்கு காரணம் ஈரான் என சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம்சாட்டின. …

இந்திய அரசியல் தலைவர்களில், டுவிட்டரில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்தொடர்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பிற்குப் பிறகு உலகிலேயே டுவிட்டரில் அதிகம் பின்பற்றப்பட்டு வரும் இரண்டாவது அரசியல்வாதியாக பிரதமர் மோடி உள்ளார். டுவிட்டரில் 5.07 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர். …

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று , தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. …

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரம் புது பொலிவுடன் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மாமல்லபுரம் சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. …

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, மக்கள் மத்திய அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே அவர்களை ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். …

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- …

சென்னை கிண்டி சோழா ஓட்டலில் இருந்து கோவளத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். கிண்டி படேல் சாலை, மத்திய கைலாஷ், ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே கோவளம் பயணம் செய்தார். கோவளத்தில் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி. …

பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை போல் தற்போதும் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, தமிழகம் வந்துள்ளார். …

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருபவர் காஜல் அகர்வால். தற்போது சில படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். …

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. …

துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப் , இருநாடுகளுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கும் என கூறியுள்ளார். …

இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து நம் நாட்டு கலாச்சாரம் குறித்து விளக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. …

சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வரவேற்றனர் …

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை எளிதில் வென்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். …

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு, இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். …

அக்டோபர் 11 அன்று, சீன அதிபர் ஜி பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். தற்போது அமெரிக்க-சீனா வர்த்தகப்போர் நடைபெறும் இக்கட்டான சூழலில், இது ஒரு முறைசாரா பேச்சுவார்த்தை என்றாலும் இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. …

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த 2 ந்தேதி அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் உள்ள மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள கோவிலுக்கு அருகே பாம்பின் தோல் ஒன்று கிடந்து உள்ளது காலையில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த கோயில் ஊழியர் இந்த தோலைக் கண்டு உள்ளார். கோயில் வளாகத்திலிருந்து 10 அடி தூரத்தில் இது கிடந்து உள்ளது. …

இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. …

இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரபேல் போர் விமானம் ஒன்றை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. பாரீஸ் நகரில் இதை பெற்றுக்கொண்ட ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், அதில் பூ, தேங்காய் வைத்து பூஜை செய்தார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. …

அக்டோபர் 26 மற்றும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் 26ஆம் தேதி பள்ளி வேலைநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே விடுமுறை கிடைத்தது. …

பேனர் விழுந்ததால், லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுபஸ்ரீ தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். …

ஊக்க மருந்து உட்கொண்ட காரணத்தால் இந்திய தடகள வீராங்கனை, நிர்மலா ஷியோரனுக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. …

சேலம் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் திடீர் மழை மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதியில் அதிக அளவிலான மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். …

தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. …

சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பானிய ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் ரூ. 177 கோடிக்கு ஏலம் போனது. …

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரிகோம் காலியிறுத்திக்கு முன்னேறினார். …

நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை என்பது குறித்து பதிலளிக்க விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. …

சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதி ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். …

தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின், கைபேசி, கைப்பை உள்ளிட்டவை இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்களால் பறிக்கப்படுவதும், தடுக்க முற்படும் பெண்கள் பலத்த காயம் அடைவதும் தினந்தோறும் நடைபெறக்கூடிய வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. …

ரஃபேல் போர் விமானத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் பயணித்ததாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். …

வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாமல்லபுரம் வரவிருக்கும் சீன அதிபருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டதாக திபெத்திய பேராசிரியரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். …

விராட் கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் ஒரு பெரிய சக்தியாக மாறியுள்ளதுடன், ஒரு புதிய சகாப்தத்தை முன்னெடுத்து உள்ளதாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், கேப்டன் விராட் கோலியை பாராட்டி வருகின்றனர். …

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில், கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். …

அக்டோபர் 21 ம் தேதி நடந்த மராட்டிய மாநிலம் மற்றும் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல்காந்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதாகக் கூறியதுடன், கட்சியும் அவரை ஒரு நட்சத்திர பிரச்சாரகராக பட்டியலிட்டுள்ளது. …

இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே எல்லை தகராறு உள்ளிட்ட சில பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், பொருளா தாரம் உள்ளிட்ட உறவுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இரு நாடுகளின் தலைவர்களும் பரஸ்பரம் நல்லுறவை பேணி பாதுகாக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஏற்கனவே சில முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள். …

தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. பெரும் காடான இங்கு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பூங்காவிற்குள் ஹயூ நரோக் என்ற அருவி உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த அருவியின் அருகே யானை கூட்டம் உலாவிக்கொண்டிருந்தது. அப்போது 3 வயதான குட்டியானை அருவியில் இருந்து தவறி விழுந்தது. …

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெங்கடேஷ் நாயக் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். கைது செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள், அமைப்புகளின் தலைவர்கள், அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், அவற்றின் முகவரி, அவர்கள் எந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரம் ஆகியவற்றை கேட்டிருந்தார். …

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. …

வடக்கு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூன்றாவது தலைவர் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். …

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவர் துபாயில் வசித்து வருகிறார். அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியையும் அவர் நடத்தி வருகிறார். …

மத்திய உள்துறை மந்திரி வெளியூர் செல்லும் போதெல்லாம், எல்லை பாதுகாப்பு படையின் விமானப் பிரிவு, தனது விமானத்தில் அவரை ஏற்றிச்செல்லும். உள்துறை மந்திரியின் விமானத்தை இயக்குவதற்கு ஆயிரம் மணி நேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் இருக்க வேண்டும். …

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்களும் விளாசினர். …

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ந் தேதி அதிகாலை இந்த கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் 2 பேர் உள்ளே புகுந்து 30 கிலோ எடை கொண்ட ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டை …

பீகாரில் முசாபர்பூர் நகரில் கோபர்சஹி பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று பணிகள் நடந்து கொண்டிருந்தன. …

கேரளாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களது உடல்களை தோண்டி எடுத்து விசாரணை நடத்தியதில் சொத்துக்கு ஆசைப்பட்டு உறவுக்கார பெண்ணே 6 பேருக்கு விஷம் வைத்து தீர்த்து கட்டியது அம்பலமானது. இதுதொடர்பான உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். …

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதில் அவ்வப்போது உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. …

மதுரை கோ.புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்தவர் பூமிநாதன். போலீஸ்காரராக பணியாற்றி வந்த இவர் இறந்து விட்ட காரணத்தினால், வாரிசு அடிப்படையில் இவருடைய மனைவி வெங்கடேஸ்வரிக்கு வேலை வழங்கப்பட்டது. …

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டாலஸ் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் ஆம்பர் கைகெர் (வயது 31). வெள்ளை இனத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி, தனது வீட்டின் அருகே வசித்து வந்த கருப்பின வாலிபரான போதம் ஜீன் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். …

காஷ்மீரின் தெற்கு பகுதி நகரமான அனந்த்நாகில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த பகுதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. …

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்களை எடுத்துள்ளது. …

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காஷ்மீரில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ஹெலிகாப்டர் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி ராகேஷ் குமார் பதாரியா தெரிவித்துள்ளார். …

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில், ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தை விஷ்ணு வர்தன் தயாரிக்கிறார் , ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், …

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட, மத்திய குழுவினர், அது குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். …

ஆந்திராவில், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலன் அடையும் வகையில், 'ஒய்.எஸ்.ஆர்., வாகன மித்ரா' திட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று துவங்கி வைத்தார். …

மஹாராஷ்டிராவில் முக்கிய எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் தினா பாட்டீல், அந்த கட்சியிலிருந்து விலகி, சிவசேனாவில் இணைந்துள்ளார்.. …

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இன்று ஒரே நாளில் 60 மி.மி.,க்கு மேல் மழை பெய்தது. குறிப்பாக 1.5 மணி நேரத்தில், 44 மி.மி., மழை பெய்ததினால், நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. …

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆலோசனை நடத்தினார். …

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர். …

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன் பிடித்த 18 இலங்கை மீனவர்கள், கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 படகுகள் கைப்பற்றப்பட்டன. …

இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத பிரமாண்டமான படங்களாக ‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 படங்களும் அமைந்தன. இந்த படத்தில், ‘கட்டப்பா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருந்தார். அது, கதாநாயகனுக்கு இணையான குணச்சித்ர வேடம். 2 படங்களிலும் சத்யராஜின் திறமையான நடிப்பு பேசப்பட்டது. …

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. …

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவடைந்தது. …

பொருளாதார நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பல நாடுகளின் ஆதரவை கோரி வரும் இந்தியா தற்போது, சவுதி அரேபியாவின் ஆதரவை பெற முயற்சிகள் மேற் கொண்டு வருகிறது. …

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கானிற்கு தடைவிதிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து, பிரான்ஸ் அதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், அவரின் உரையாற்றலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. …

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், கிரிக்கெட் அணிக்கான ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். …

உ.பி. மாநிலத்தில், தான் விரும்பிய பெண் உட்பட மூன்று பேரை கொன்ற டிக்டாக் வெறியனை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். …

அக்னிச்சிறகுகள் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ள படக்குழுவினரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. …

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் சென்று வர கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. …

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சத்யவதி என்ற மனைவியும், அக்சயா, நந்தினி, தர்ஷினி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் அக்சயா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார், சிறுகுழந்தைகளான நந்தினி, தர்ஷினி ஆகியோர் தாய் சத்யவதி பராமரிப்பில் வீட்டில் வளர்ந்து வந்தனர். …

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முடித்துக்கொள்ளப்பட்டது. …

கோவை மாவட்டத்தில் பொருள் வாங்குவதுபோல் சென்று, இனிப்பு கடையில் இருந்த பெண் அணிந்திருந்த 6.5 சவரன் தாலி சங்கிலியை இளைஞர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. …

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை புரிந்துகொண்டதாகவும், மத்திய அரசுடன் நடந்த பேச்சு சுமுகமாக இருந்ததாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருப்பதாகவும், சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. …

உப்பூர் அனல்மின் நிலைய பணிக்காக கட்டப்படும் பாலத்தினை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை ரத்து செய்ய வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். …

சமீப காலமாக தேனியில், வடமாநில கொள்ளையர்களால் நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கிராமம் அம்மாபட்டி. அங்குள்ள என்.எஸ்.எஸ் சாலையில், …

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி,`தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ மூலம் சசிகலா - சந்திரலேகா சந்திப்பு பற்றிய சிறைக் குறிப்பைப் பெற்றிருக்கிறார். …

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி நகை கடை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வணிக வளாகங்கள் மற்றும் கடைகளும் உள்ளன. இந்நிலையில், நகை கடையில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்டரூ.40 முதல் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. நகை கடையின் பின்புறம் வழியாக துளையிட்டு கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. …

பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சை அரசு தொலைக்காட்சியான தூர்தர்‌ஷனில் நேரலை செய்யவில்லை என புகார் எழுந்தது. …

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவ மாணவர் உதித்சூர்யா இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரின் ஒரு வார தலைமறைவுக்கு பின்னர் சிபிசிஐடி தனிப்படை போலீசாறால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் பல இடங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு …

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது. அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. …

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழித்ததாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. …

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். …

சினிமா வசன கர்த்தாவாக இருந்த புகழ்மணி என்பவர் தன்னுடைய முதல் படமாக ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்கிரா புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், அறிமுக நாயகன் ராம்சுந்தரம், இவருக்கு ஜோடியாக பிரியங்காவும் நடித்து இருக்கிறார்கள். …

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி மற்றும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. …

கள்ளத்துப்பாக்கி விற்பனையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பான்சிங் தாக்கூர், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …

வரும் அக்டோபர் மதம் 21 ஆம் தேதி நாங்குநேரியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்த கங்காதரன் என்ற காவலர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. …

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:- …

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிகிறது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. …

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் வெப் தொடராக எடுப்பதாகவும் இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. …

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் அந்நாட்டின் பகுன்டோ போக்னிசை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த சுமித் நகால் (வயது 22) விளையாடினர். …

அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. …

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக கூறப்படுகின்றது. …

இந்திய விமானப்படையின் தளபதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பி.எஸ்.தனோவா நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய விமானப்படையின் 26வது புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா இன்று(29.09.2019) பதவியேற்றுக்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. …

டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்க அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். …

சிவகங்கை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றிய விவகராத்தில் கிராம நிர்வாக உதவியாளர் வெட்டிக்கொல்லப்பட்டார். …

கோதாவரி - காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று, சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்த மனுவில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். …

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாட்னா நகரின் எஸ்.கே. பூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. …

பழம்பெரும் நடிகரான விஜு கோட்டே (வயது 77) 1964 ஆம் ஆண்டில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ஷோலே திரைப்படத்தில் காளியா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். …

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தெற்கு நோக்கிச் சென்றால், கூடல்மாநகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வீடுகள் எதுவும் கட்டப்படாததால், வீட்டுமனைக்காக பிரிக்கப்பட்ட, பல ஏக்கர் நிலத்தில் காட்டுச்செடிகளும், மரங்களும் வளர்ந்து காடு போல் காணப்படுகிறது. நேற்று இந்த பகுதியில் புதர்களுக்குள் ஒரு இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக, அலங்கியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. …

காஷ்மீர் மாநிலத்தின் ரம்பான் மாவட்டத்தில் உள்ள படோட் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். …

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. …

கூகுள் நிறுவனம் உலகெங்கிலும் 18 புதிய எரிசக்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமானவை. இவை நிறுவனத்தின் உள்கட்டமைப்பை உருவாக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தங்கள் கூகிளின் உலகளாவிய காற்று மற்றும் சோலார் ஒப்பந்தங்களின் போர்ட்ஃபோலியோவை மேலும் 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க உதவும். அதுமட்டுமின்றி கூடுதலாக 5,500 மெகாவாட் வரை மின் உற்பத்தியும் செய்கிறது. இன்னும் கொஞ்ச்ம் ஆழமாக பார்த்தால் இதனால் கிடைக்கக்கூடிய …

உன்னாவோவில், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார், சம்பவ தினத்தன்று இருந்த இடத்தை, வரும் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கண்டுபிடித்துக் கூறுமாறு, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஆப்பிளிடம், டெல்லி உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது …

சுற்றுலா வரும் வெளி நாட்டு சுற்றூலாப் பயணிகள் பொது இடத்தில் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது உள்ளிட்ட 19 வகையான சட்டதிட்டங்களை வகுத்துள்ளது சவுதி அரேபியா. …

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். …

சென்னை பள்ளிக்கரணையில்,பேனர் விழுந்து லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். …

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொறுப்பு துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் பேசியதாவது:- …

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் சிங் தலிவால், வயது 40. இந்திய வம்சாவளி சீக்கியரான இவர், அங்குள்ள காவல்துறையில் பணியாற்றி வந்தார். டெக்சாஸின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியான இவர், வடமேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தார். …

தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி, இரண்டு மாதங்களாக ஓய்வில் இருக்கும் முன்னாள் கேப்டன் தோனி, பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்டத்தை தொடர்ந்து. விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின் 'கைதி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். …

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றவர் அபிராமி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களிலேயே வெளியேறினார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ப்பதற்கு முன்னர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். …

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ என்டர் இளம் வயது பெண் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். …

மும்பையில் இருப்பதைவிட தமிழகம் பிடித்திருப்பதால் சென்னையில் குடியேற விரும்புவதாக, பிரிவு உபசார விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி பேசினார். …

பூடான் நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்த பொது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. …

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. …

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "உலக அளவில் அதிக ஓட்டுகளை பெற்று எங்கள் கட்சி இந்தியாவில் ஆட்சி அமைத்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய அளவிலான தூய்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. …

சவூதி அரேபியா வெள்ளிக்கிழமை, முதல்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக கூறி உள்ளது. தனது பொருளாதாரத்தை எண்ணெயை மட்டும் நம்பி இருப்பதில் இருந்து விலக்கி வைப்பதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக சுற்றுலா விசாக்கள் வழங்க உள்ளது. …

‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். …

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில், முதன்முறையாக விமானத்தில் குழந்தையுடன் பயணிப்பவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டதுடன், அந்த தகவலை அறிய பிரத்யேக சின்னமும் காண்பிக்கப்படுகிறது. …

இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …

உக்ரைனில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில், கைதான உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. …

காய்ச்சல் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் வீட்டில் உள்ள மருந்தை கொடுக்க வேண்டாம் என்றும், டெங்கு காய்ச்சல் குறித்து பேட்டியளித்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். …

இந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மாதவன். இவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பல பதங்கங்களை வென்று சாதித்து வருகிறார். …

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ரத்து செய்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், வதந்திகள் பரவி வன்முறை வெடிக்காமல் இருப்பதற்காக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்பட்டன. …

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர வினிதா, வயது 20. இவருக்கும், காளையார்கோவில் அருகே உள்ள சானாஊருணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ (25) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. …

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 22 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ஜெய்ப்பூரில் சந்தித்தது. …

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி பிரேம்நாத் தன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து கொண்டார். …

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான, "மலபார் 2019" என்று பெயரிப்பட்டுள்ள கடற்படை பயிற்சி, மேற்கு பசிபிக் கடல் பகுதியில், நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. …

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் முதன்மை வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றோடு வெளியேறி, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார். …

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ரா வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துளளார். …

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் சென்றிறங்கிய பிரதமர் மோடியை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கு அவருக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடியிடம் தங்களது கோரிக்கைகளை வைத்ததுடன் பிரதமருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர். இதன்பின்பு பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள …

தெலுங்கு சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ், வயது 39, உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சூர்யாபேட்டை மாவட்டத்தில் கோடாட்டில் பிறந்த வேணு மாதவ், 1996-ல் 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதுவரை …

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. …

பிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 21 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் அபயாம் உருவாகியுள்ளது. உலகச் சுற்றுலாப் பயணிகளின் முன்னோடி அறிஞரான தாமஸ் குக் மூலம், 1881 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தாமஸ் குக் நிறுவனம், 1927-ம் ஆண்டு தனது விமானப் பயணத்தை தொடங்கியது. ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல வங்கிகள் கடன் பெற்று தனது நிறுவனத்தை விரிவுபடுத்திய தாமஸ் …

அரசுப் பள்ளி வகுப்பறையில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட சம்பவத்தால் தேனி மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டி வாய்க்கால்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு, அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். …

உலகளவில் நடைபெற்ற ‘தி வேல்ர்ட்'ஸ் பெஸ்ட்' (The World's Best) என்ற நிகழ்வில், தன் பியனோ இசைத் திறமையால் டைட்டில் வென்று, சர்வதேச அரங்கில் மிளிர்ந்தவர் 13 வயதே ஆன சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். லிடியன் இசை பயின்றது சென்னையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி. லிடியனை ஊக்குவிக்கும்பொருட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவருக்குப் பாராட்டு விழா நடத்தினார். அப்போது பேசிய ரஹ்மான்,"லிடியன் தற்போது சர்வதேச கவனத்தை சென்னை இசைக்கலாசாரம் …

சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

பாலிவுட் சூப்பர்ஸ்டார், நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. …

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். …

முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று 12 ஆண்டுகள் ஆகின்றன, அதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தனது குழந்தை பருவ நினைவுகளை நினைவுப்படுத்தும் ஒரு வேடிக்கையான வீடியோவை தோனி பகிர்ந்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றி நேற்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது. இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில், தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி …

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை, விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது …

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் கோபத்துடன் பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு உடனடியாக டிரம்ப் உங்கள் கேள்வி ஒரு அறிக்கையைப் போலவே தெரிகிறது என்றார். …

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் : "பிரதமர் மோடி தலைமையில், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. …

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த், அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில், கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து, ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். …

பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இனி செயல்தான் என்றும், ஐ. நா.வின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். …

இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக குறைந்தது 500 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் எல்லையோரம் தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. …

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கல்லூரி அருகே மாணவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

மும்பையில் தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை, பெண் கல்லூரி விரிவுரையாளர் துணிச்சலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டார். …

வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. …

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. …

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். …

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 இளம்பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவத்தால், டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். …

2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருத்திற்கு 28 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட அதில் அதிகாரப்பூர்வமாக "கல்லி பாய்" திரைப்படம் தேர்வாகியுள்ளது. …

விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் டகால்டி. இந்த படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல பெங்காலி நடிகை ரித்திகா சென் அறிமுகமாகிறார் …

மேற்கு வங்கத்தில் 7வயது சிறுவனை சூனியம் செய்வதற்காக பலி கொடுத்த, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

பிரான்சிடம் இருந்து வாங்கும் முதல் ரபேல் போர் விமானத்திற்கு புதிய ஏர் மார்ஷல் ஆர்.எஸ்.பாதாரியாவை கௌரவிக்கும் வகையில் அதற்கு ஆர்.பி.- 01 என்று பெயரிடப்பட்டுள்ளது. …

நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த கனடா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமிதே பலர் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். …

சென்னையில் வழக்கறிஞர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதும், எதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியை சிக்க வைக்கும் நோக்கத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. …

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. …

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). …

“சந்திரயான்-2 விண்கல திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் ஆர்பிட்டர் ஓராண்டுக்கு செயல்பட திட்டமிட்டிருந்தாலும் மேலும் 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு உள்ளது” என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார். உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 7-ந் தேதியன்று திட்டமிட்டபடி நிலவின் தென்துருவ பகுதியில் மெல்ல தரை இறங்க முடியாமல் போய்விட்டது. அதன் தகவல் தொடர்பு எதிர்பாராத வகையில் துண்டிக்கப்பட்டது. …

சிறுமியின் நெற்றியில் பைத்தான் வகை பாம்பு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. செல்ல பிராணிகளை வளர்க்கும் வீடுகளில் குழந்தைகள் அவற்றுடன் விளையாடி மகிழ்வது வழக்கம். இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி அவை பலரால் ரசிக்கப்படுவது உண்டு. எனினும், சமீபத்தில் வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. …

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்தன. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 30ந்தேதி முடிவடைகிறது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்றும், …

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித்சூர்யா (வயது 21). தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார். …

சவூதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தது. அந்த தடை ஈரானின் மத்திய வங்கி மற்றும் செல்வ நிதியை இலக்காகக் கொண்டது ஆகும். …

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. …

ஹௌடி மோடி நிகழ்ச்சிக்கு எதிராக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பேரணி நடத்த போவதாக , அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். …

இந்திய விமான படைக்கு தேவையான, ரபேல் ரக முதல் போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப்பின், இந்த விமானம், நம் நாட்டு விமானப் படையுடன் சேர்க்கப்படும். …

மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. …

கேரளாவின் அலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையின் பணிபுரியும் ஆறு ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ .300 மதிப்புள்ள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற 52 கிலோ எடை ஆண்கள் பிரிவின் அரையிறுதிபோட்டியில், சாகேன் பிபோஸினோவை எதிர்கொண்ட பாங்கல் 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பாங்கல் ஆவார். …

'சந்திராயன் 2' வின் விக்ரம் லாண்டரை தேடி பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆர்பிட்டர், அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. …

பாகிஸ்தானில் மனித உரிமை மீறல் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது எனக் கூறியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த குலாலாய் இஸ்மாயில். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெண்கள், அந்நாட்டு இராணுவத்தினால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்த படுவதாகவும், முகநூல் மற்றும் ட்விட்டரில் தகாத வார்த்தைகளினால் திட்டப்படுவதாகவும் கூறி பெண் ஆர்வலரான குலாலாய் இஸ்மாயில் தனது சமூக வளைதளங்களில் குறிப்பிட்டதை தொடர்ந்து, தவறான செய்திகள் பரப்ப முயல்வதாகவும், சொந்த நாட்டிற்கு எதிராக செயல் படுவதாகவும் …

ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க அரசு விலகியதை அடுத்து அந்நாட்டின் முக்கிய வளமான எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. இதனால், ஈரானில் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. …

`எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை அசின். அந்த படத்தில் அவர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். …

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் கருதும் இடத்தில் பாபர் மசூதி அமைந்திருந்தது. அந்த மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்து கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. …

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. …

6 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 26 வயது இளைஞனுக்கு ஒடிஸா சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. …

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். …

பிஃஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சிபிடி என்ற அமைப்பு தீர்மானிக்கிறது. அந்த வகையில் வருங்கால வைப்பு நிதியின் கீழ் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு இதுவரை பிஃஎப் 8.55% வட்டி விகிதமாக இருந்தது. …

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்மணியான மெலிகன், தூங்காமல் தொல்லை கொடுத்த தனது ஒரு வயது குழந்தைக்கு ஹெராயின் போதை மருந்தை கொடுத்து கொலை செய்துள்ளார். அமெரிக்கா மெயின் என்ற பகுதியைச் சேர்ந்த மெலிகன் என்ற பெண்மணிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஓன்று இருந்தது . தன்னை தூங்க விடாமல் அடிக்கடி தொல்லை கொடுத்த அவருடைய ஒரு வயது குழந்தைக்கு ஹெராயின் போதை மருந்தை கொடுத்து கொலை செய்துள்ளார் மெலிகன். …

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(Pok) பகுதியில் பாகிஸ்தான் புதிய ராணுவ விமானத்தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் ராணுவ விமானத்தளம் அமைக்கப்படவுள்ளதாக்க தகவல்கள் வெளியாகி உள்ளன. காஷ்மீர் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசு 1600 மில்லியன் பாகிஸ்தானி ரூபாய் …

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வந்தது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் படித்த இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தரப்படும் என்று ஆன்லைன் மூலம் இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியது. …

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘ரூட் தல’ தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் சில மாணவர்கள் பட்டாகத்தியுடன் பஸ்சில் பயணம் செய்த, வேறு சில மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. …

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதி போட்டியில் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கார்லோ பாலமை எதிர்கொண்டார். ஆட்டம் தலா 3 நிமிடம் வீதம் 3 ரவுண்ட் கொண்டது. …

கடந்த ஆகஸ்ட் 5 ந்தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் சீனாவுடன் சர்ச்சைக்குரிய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் லடாக்கிற்கு யூனியன் பிரதேச அந்தஸ்தை வழங்க முடிவு செய்தது. …

ஆந்திரா மாநிலம் கர்ணூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. …

இந்தி குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். …

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை, இந்நிலையில், …

கோவை அருகே பல் வலிக்கு வாங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கும் விமானத்தை தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என, பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. …

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. …

ஹிந்தி திணிப்பு கருத்துக்கு எதிராக திமுக அறிவித்திருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். …

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் வந்தபோது அந்த மாணவனிடம் ஹெல்மெட் ஏன் அணியவில்லை? என கேட்டு போலீசார் அந்த மாணவனின் சைக்கிளை பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி ஓன்று பரவி, பரபரப்பாக பேசப்படுகிறது. …

பாகிஸ்தான் சிந்த் மாகாணம், லார்கானாவில் நம்ரிதா சாந்தினி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண், விடுதியில் தங்கியிருந்து பல் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். …

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிபிர் பிரிவில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் அதிரடி எல்லை படையினர் ஊடுருவ முயன்றுள்ளனர். …

சென்னை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. …

திருச்சியில் காவல்துறையினர் லாரியை துரத்தியதால் தாறுமாறாக ஓடிய லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. …

கும்பகோணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தான் பெட்ரா இரு பெண் குழந்தைகளை தந்தை குடிபோதையில் ஆற்றில் வீசினார். இதில் ஒரு குழந்தையை அங்கிருந்த இளைஞர்கள் காப்பாற்றினர், மாயமான மற்றொரு பெண் குழந்தையை தேடி வருகின்றனர். …

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அஞ்சலி சிங் இந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதராகி நியமிக்கப்பட்டுள்ளார். …

சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு, இனி பிரியாணி சாப்பிட அனுமதி இல்லை என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் அதிரடி முடிவெடுத்துள்ளார். …

வெளிநாட்டில் இருந்து வரும் நிதி தொடர்பான விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. …

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். …

ரஷ்யாவில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார கூட்டமைப்பின் போது, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. …

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு சொந்தமான (DRDO) ருஸ்தம் - 2 என்ற ஆளில்லா விமானம் சோதனை ஓட்டத்துக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின் போது இன்று அதிகாலை 6 மணியளவில் விமானம் அதன் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது. …

கொலம்பியா நாட்டில் பொபையன் என்ற நகரில் சிறிய விமானம் ஒன்று திடீரென விபத்துக்குளாகி அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 9 பயணிகள் பயணித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. …

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. …

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா; திரைப்படத்தின் டீசர் வெளியானது. துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதன் பிறகு நரகாசூரன் என்ற படத்தை அவர் இயக்கினார். …

மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …

நம் தாய்மொழியாகிய இந்தி நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்திருந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியே முதன்மையானது என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். …

பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்த போது 1978-ம் ஆண்டில் பொது பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தார். அந்த சட்டத்தில், காஷ்மீரில் மரங்களை வெட்டி கடத்துபவர்களை கடுமைக்கியாக தண்டிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. …

மியான்மரில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, உள்நாட்டு வீரர் Nay டிவே ஓவை எதிர்கொண்டார். …

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து நேற்று முன்தினம் ஆளில்லா விமானம் மூலமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. …

அயோத்தி வழக்கை தொலைக்காட்சியில் நேரலை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கே.என். கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். …

சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்கிற இளம் பெண் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையின் நடுவே ஆளும் கட்சியான அதிமுக சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. …

இதுவரை தமிழ் நகைச்சுவை நடிகர்கள் ஒருவருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பு ஒன்று நடிகர் யோகிபாபுவுக்கு கிடைக்கவுள்ளது. மிக விரைவில் அமீர்கானின் இந்திப்படம் ஒன்றில் நடிக்க மும்பை செல்லவுள்ளார் யோகி பாபு. ஏற்கனவே இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதியின் சிபாரில்தான் இந்த வாய்ப்பு யோகிபாபுவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. …

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி 20 போட்டிதொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டி-20 போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடைபெற இருந்தது. …

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு முன்பாக, பிரதமர் மோடி, அமெரிக்காவில் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். …

ஏற்காடு ஒன்றிய பா.ஜ.க துணைத்தலைவர் சின்ராஸ் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். …

தாதா 87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ தற்போது, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி என்கிற கேமை மையமாக கொண்ட 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற நகைச்சுவை கலந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். …

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். …

காஷ்மீர் எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். …

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: …

இந்தோனேசியாவில் உள்ள ஹல்மாஹேரா தீவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. …

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் டி.பார்ம் படித்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். …

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. …

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). இவருக்கும், வேலை விஷயமாக கோவை சென்ற சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி புனித அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாய்அன்பன் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. …

டெல்லி சாக்தாரா பகுதியை சேர்ந்த 60 வயதான ஒருவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இளைய மகள் மோனிசா (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). …

உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் எது? என்பதை அறிவதற்காக டைம்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 92 நாடுகள் அடங்கிய 1,396 கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. அதன் தரவரிசைப் பட்டியலை டைம்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. …

வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. …

டெல்லியில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு, மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி ரூ. 2,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. …

குஜராத்தில் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள சிங்கங்கள், ஜூனாகத் நகர சாலையில் ஜாலியாக உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. …

சென்னையை சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் இரு பெண் குழந்தைகளுடன், வியாசர்பாடி பகுதியில் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். …

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. …

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்மவிபூஷண் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷண் விருதும் வழங்க விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. …

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். …

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 2 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டு பின்னர் லண்டனுக்கு தப்பி சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, தற்போது இந்திய அரசின் முயற்சியால் லண்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். …

ஜார்கண்டின் கார்வா மாவட்டத்துக்கு உட்பட்ட பஸ்சி கிராமத்தில் திடீரென இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 10 பேர் அங்குள்ள ஒரு மரத்தடியில் மழைக்காக ஒதுங்கி நின்றனர் . அப்போது திடீரென பலத்த மின்னல் ஒன்று அந்த மரத்தை தாக்கியது. …

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். …

சேலத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் ஐந்து பேரை சேலம் மாவட்ட போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். …

தோனி ஓய்வு பெறுவதாகக் கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று அவரது மனைவி சாக்க்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …

இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது. …

சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் மீது பேனர் விழுந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். …

டைம்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் டைம்ஸ் நிறுவனம், உலகளவில் தலை சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் பட்டியலை தரவரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை டைம்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது. …

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் பழனிச்செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருப்பதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தனியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

ஆகஸ்ட் 15, 2022க்குள், இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அரசாங்கம் ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது ஒரு புதிய கட்டிடம் அல்லது தற்போதுள்ள வரலாற்றுக் கட்டிடம் மறுவடிவமைப்பு செய்யப்படும். …

நடிகை அமலா பால் தனது சமீபத்திய படமான ஆடையின் வெற்றிக்குப் பிறகு கிளவுட் ஒன்பதில் இருக்கிறார், இந்த படம் பார்வையாளர்களிடமிருந்து ஒருமனதாக நல்ல வரவேற்பைப் பெற்றது, …

திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுவதாக திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். …

சென்னை அம்பத்தூர் முருகன் இட்லி கடையின் உற்பத்தி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகன் காபி நிலையம் என்று 1991ல் மதுரையில் தொடங்கப்பட்ட கடைதான் முருகன் இட்லி கடை. அதன்பின் முருகன் இட்லி கடை என்று பெயர் மாற்றப்பட்டு தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. மிகவும் பிரபலமான இந்த உணவகத்திற்கு சென்னையில் 17 கிளைகள் உள்ளது. அதேபோல் மதுரையில் 3 மற்றும் சிங்கப்பூரில் இரண்டு கிளைகள் …

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் வழங்கினார். …

கம்யூனிஸ்டு நாடான சீனாவில் அலிபாபா நிறுவனம், ஆன்லைன் வழியேயான வர்த்தக சேவையில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் . உலகின் மிக பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் என்ற பெருமை பெற்ற இந்நிறுவனம், …

கோவை மாவட்டம், சூலூரில் ஏற்கனவே இரண்டு திருமண செய்து மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் தினேஷ் ( 26). இவர் ராசிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பேட்டன் மேக்கராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த …

தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. …

ஆப்பிள் ஆர்கேட் சேவை, ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்பட இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. …

சென்னை அண்ணாசாலையில் மீண்டும் இருவழிப்பாதை மாற்றப்படவுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. …

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை நாளை முதல் தொடங்கவிருப்பதாகவும் , ஜனவரி 10 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. …

பிரெக்ஸிட் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையிலான மோதல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மூன்று தோல்விகளை வழங்கியது. …

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணியை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. …

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவ்வப்போது ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா, நடப்பு மாத இறுதியில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பாக கூறியது. இந்த சூழலில், மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. …

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா. இவர், வட்டார பா.ஜனதா செயலாளராக பணியாற்றி வந்தார். அதுமட்டும் இல்லாமல் ஒரு கல்லூரியில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்தார். …

ரெயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ. தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. …

பிரிட்டிஸ் ஏர்வேஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. …

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தை மூத்த இயக்குனரான மணிரத்னம் உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். …

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்பு மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட இலங்கை அணி வீரர்கள் 10 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர். …

மதுரையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.25.10 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. …

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மாண்டோர்ஸ்வில்லி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் டிஃப்பனி வில்லியம்ஸ் தம்பதி. இவர்கள் வங்கிக்கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் 85 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இந்த தகவலை உடனடியாக வங்கிக்கு தெரிவித்திருக்க வேண்டும் ஆனால், இதை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், சேவி, ரேஸ் கார்கள் வாங்குவது என்றும், நண்பர்களுக்கு உதவியது என்றும் டெபாசிட் ஆன …

தென்னிந்தியாவில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே. சைனி கூறியுள்ளார். …

பாகுபலியில் அதிரடி சண்டை காட்சிகளில் வந்து ரசிகர்களை கவர்ந்தார் தமன்னா . இது அவரது திரையுலகை வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. இப்போது வழக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து ரூ.120 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய குயின் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘தட் இஸ் மகாலட்சுமி’ படத்தில் நடித்துள்ளார். …

நியூயார்க்கில் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் வருடாந்திர உயர்மட்ட ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஐ.நா. பொதுச்சபையின் 74வது அமர்வின் (யு.என்.ஜி.ஏ) பொது விவாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பட்டியலின்படி, செப்டம்பர் 27-ந்தேதி காலையில் உயர்மட்ட அமர்வில் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி, 2014ல் ஐ.நா பொதுச்சபையில் உலகத் தலைவர்களுக்கு மத்தியில் தனது முதல் உரையை நிகழ்த்தி இருந்தார். இது …

உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக அமைக்கப்பட்ட டைனோசர் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணை அருகே உள்ள ஆற்றுப்படுகையில் 182 மீட்டர் உயரத்தில் “Statue of unity” என்ற பெயரில் இந்தியாவின் இரும்பு மனிதர் என எல்லாராலும் அன்பாக அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை, 2989 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இதை கடந்த …

ஓமலூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு இளைஞர்களை இருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ராமிரெட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மகள் சரண்யாவுக்கு உடல்நலமின்மையால் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தாரமங்கலம் அருகே சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த …

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், மரங்களில் விளம்பர தட்டிகள் , பலகைகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்றவற்றை அமைப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னாள் பி.ஜே.பி தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், செரீனா வில்லியம்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் பியான்கா. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், முன்னணி வீரங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதிக்கொண்டனர். …

பாலைவனச் சோலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் நேற்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜசேகர் பாரதிராஜாவின் முதல் படமான நிழல்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற ’இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலின் இவர் மிகவும் பிரபலமானார். …

அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஏற்கனவே சந்திரயான்-1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்த இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) விஞ்ஞானிகள் அடுத்ததாக சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி, அங்கு தரை இறங்கச் செய்து ஆய்வு நடத்த தீர்மானித்தனர். …

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவித்தார். தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார். …

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பெருமைகள் மலைபோல் குவிந்திருக்கும் திருவண்ணாமலையில், ஏறுபோல் பீடுநடை போடும் தி.மு.க.வின் “முப்பெரும் விழா” செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறுகிறது. தி.மு.க.வை உருவாக்கி அதனைக் கவின்மிகு மாளிகையாகக் கட்டிக்காத்து, ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15. அந்த அண்ணாவை அரசியலில் ஆளாக்கிய அகிலம் போற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் …

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நேற்று அதிகாலையில் நிலவின் மேற்பரப்பில் இறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நிமிடங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லேண்டர் கருவி தொடர்பை இழந்தது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிகழ்வில் பின்னடைவு ஏற்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த ஏமாற்றமும், சோகமும் அடைந்துள்ளனர். அவர்களை பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தேற்றினர். …

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. பாகிஸ்தானின் சிந்தி பகுதியில் கடந்த 1923ம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த இவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணியாற்றினார். …

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார். …

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கள்ளக்காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவில் மீண்டும் நுழைந்த தினகரன், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். இதனால் அதிமுகவில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். …

கோவா நீச்சல் சங்க பயிற்சியாளராக இருந்த சுராஜித் கங்குலி தன்னிடம் பயிற்சி பெற்ற 15 வயது வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பய் ஏற்படுத்தியது . …

அமெரிக்காவை சேர்ந்த பழம்பெரும் ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான வூடி ஆலன் பல பன்முக திறமைகளை கொண்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட் திரையுலகில் பணியாற்றி வருகிறார். …

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. …

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மற்றும் அந்த அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். …

பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக கூறி ஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய கேரள அரசு தடை விதித்துள்ளது. …

கோவையில் நேற்று போலீஸ் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. …

தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், பாலின் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. …

டெல்லி மாநிலத்தின், சாந்தினி சவுக் தொகுதியின் எம்எல்ஏ அல்கா லம்பா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். …

இந்தியா முழுவதும் திருத்தும் செய்யப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. …

ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் திருமணமாகி 57 ஆடுகளுக்கு பின்னர் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். …

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோகுல் என்ற கோகுல்நாத் (வயது 23). இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. …

புதுச்சேரி வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு, 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற சாணிக்குமார்(வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் உள்ளன. …

இயக்குனர் கௌதம்மேனன் இயக்கித்தில் உருவாகியுள்ள தனுஷின் ’எனை நோக்கிப் பாயும் தோட்ட’ திரைக்கு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே சூர்யாவை நாயகனாக வைத்து கௌதம்மேனன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. …

மொகரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 11ஆம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. …

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அம்ராய்வாடி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று, இன்று திடீரென இடிந்து விழுந்தது . உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் …

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். …

சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் வெளிநாட்டினரை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு, அரசியல், சினிமா துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன. …

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.. …

இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் "அப்துல் பாசித்" ஆபாச நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரீ- டுவிட் செய்து காஷ்மீர் அனந்த் நாக் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப், …

போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கான அபராத தொகை உயர்வு, கடந்த 1-ந் தேதி நாடு, முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்காக ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் ரூ.47 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலியிறுதி போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். …

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான சிவகுமாரை ஒன்பது நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. …

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீராம் மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 64. …

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்து வெளியேறிய நடிகை மதுமிதா விஜய் டிவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். …

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடி அவ்வப்போது நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதித்து வருகிறது. இந்த வகையில் இதுவரை 14 கூட்டங்கள் நடைபெற்று உள்ளது. …

விளாடிவோஸ்டோக்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்னிலையில் ரஷ்யாவும் இந்தியாவும் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன. …

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் சீனாவின் குவாங் வாங் ஆகியோர் மோதினர். …

பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார். …

காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரேக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் புனே, சிரூர் தாலுகாவில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …

சென்னை மடிப்பாக்கம் மூவரசன் பேட்டையை சேர்ந்தவர் சுமதி(வயது 43). இவரது கணவர் கோகுலகிருஷ்ணன்., தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். …

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவன் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்நிலையில், ராஜீவ் தவனுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததால் இது தொடர்பாக அவர் கோர்ட்டு அவமதிப்பு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். …

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்திற்கு தள்ளிவிட்டு, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். …

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். …

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக திங்கட்கிழமை அன்று நியமிக்கப்பட்டார். …

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைதானதை தொடர்ந்து கர்நாடகாவில் மூன்று பேருந்துகள் மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசியுள்ளனர். இதையடுத்து, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. …

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான மிதாலி ராஜ், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36-வயதான மிதாலி ராஜ் 32 இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார். …

சென்னை கே.கே.நகர் 8-வது செக்டார் 45-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தாம்பரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். …

மதுரையில் கடந்த சில மாதங்களாக மசாஜ் சென்டர், ஆயுர்வேதிக் சிகிச்சை மையம், ஸ்பா, ஹெல்த்கேர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. …

பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 1 தங்கம் மற்றும் 1 வெண்கலம் கிடைத்துள்ளது. …

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் பேபிசானா என்ற 8-ம் வகுப்பு மாணவி, கடந்த ஜூலை 18-ந்தேதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. …

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை, மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் விலை, 16 ரூபாய் உயர்ந்துள்ளது. …

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முன்னாள் வீரர் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார். …

சென்னையில் குடியிருப்புகள் அதிகம் உள்ள வளசரவாக்கம், ஆலப்பாக்கம், மதுரவாயல், நெற்குன்றம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில், நேற்று அதிகாலை 3 மணி முதல் மும்முனை மின்சார இணைப்பு உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மட்டுமே மின் சப்ளை இருந்தது , ஓர் முனை மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்பு இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். …

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறையை விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். …

"இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதம் பயன்படுத்தாது" என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். …

டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட் ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னில் தற்போது அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்று வருகிறது, இதில் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா மற்றும் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் விளையாடினர். …

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். …

ஒரே நாளில் அதிகம் பேர் ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்ததால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வருமானவரி தாக்கல் செய்ய கடைசி நாளான கடந்த 31-ஆம் தேதி ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக மட்டும் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. …

திருச்சி விமான நிலையத்தில் 458 கிராம் எடையுள்ள, 17.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. …

தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். …

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது …

உலகிலேயே பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகிறது. பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவி செய்ய தயாராக இருப்பதாக ஜி7 அமைப்பின் உறுப்பு நாடுகள் தெரிவித்திருந்தனர். ஆனால் பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரோ அந்த உதவியை ஏற்க மறுத்துவிட்டார். …

தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்தவர் கவுண்டமணி. இவர் பிரபுவின் சின்னத்தம்பி படத்தில் மாலை கண் உள்ளவராக நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘சிக்சர்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது. …

ஐ.ஆர்.சி.டி.சி.யில் ஆன்லைன் வழியே டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.30 மற்றும் ஏ.சி. அல்லாத வகுப்புகளுக்கு ரூ.15 சேவை கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. தனியாக வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. …

பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுவுக்கு வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது மின்சார ஷாக் ஏற்பட்டது. …

திருச்சி அருகே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் மின் மோட்டார் திருடிய 3 பேர் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர். …

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் அதிதீவிர புயலான டொரியன், வருகிற திங்கட்கிழமை புளோரிடாவில் கரையை கடக்கும் என்று தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. …

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். …

கோவையில் தனியர் கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக மாணவர்கள் முன்பு கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. …

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு என்கிற தகவலில் உண்மையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. …

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். …

இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் நிகோலா டவுன்சென்ட் (வயது 50). இவரது தந்தை டெரன்ஸ் (வயது 78). நிகோலாவிற்கு தனது தந்தை மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் திடீரென கையில் கிடைத்த டி.வி. ரிமோட் ஒன்றை எடுத்து வீசியுள்ளார். …

போர் விமானங்களில் இருந்து தரையை நோக்கி வீசி, பிரமாண்ட கட்டடங்களை குறிவைத்து தாக்கி அழிக்கும், அதிநவீன வெடிகுண்டை, இந்திய விமானப்படை இஸ்ரேல் நாட்டிடமிருந்து வாங்கவுள்ளது. …

தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதை வழங்கி கௌரவித்தார் …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கலின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. …

சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த குற்றத்திற்காக பிக்பாஸ் புகழ் கவினின் தாயார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. …

குஜராத்தின் கட்ச் பகுதியில் கடல் வழியாக சிறிய படகுகள் மூலம் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நம் நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. …

சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப விஞ்ஞானி என பலரது பாராட்டுகளுக்கு புகழ்களுக்கு சொந்தக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ் இவர், கடந்த 2011-ம் ஆண்டு, தனது 56 வயதில் புற்றுநோய் காரணமாக உயிர் இழந்தார். …

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக கடுமையான சொற்களை பயன்படுத்தும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள், இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என கூறி வருகின்றனர். …

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் அதிரடியாக நீக்கப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனால், அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. …

பண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 16வது படமாக” நம்ம வீட்டுப் பிள்ளை” உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார். …

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்லவிருக்கிறார். …

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு புகுந்து தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பானது. …

சேலம் ஈஷா மையத்தில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட காவிரி குரல் அமைப்பின் பணிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அனைத்து மட்டங்களிலும் உதவ தனது ஆதரவை தெரிவித்துள்ளது. …

தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். …

வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்., கார்டுகளை தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகமாகி உள்ள நிலையில், இவ்வாறு நடைபெறும் சம்பவங்களை தடுக்க வங்கிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …

மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இணையதளங்களில் வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அதில் சிறிதும் உண்மையில்லை என மின் வாரியம் சார்பாக மறுப்பு தெரிவிக்கப்படுள்ளது. …

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இதில் சம்பந்தம் இல்லாமல் யாரும் தலையிட வேண்டாம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தானின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் …

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். சசி தரூர் கூறும் போது, “பிரதமர் நரேந்திர மோடி நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது கண்டிப்பாக பாராட்ட வேண்டும். தவறான திட்டங்களை கொண்டு வரும்போது எதிர்க்க வேண்டும். கண்களை மூடிக் கொண்டு மோடியை எதிர்ப்பது சரியாக இருக்காது” என்றார். …

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக அரசு மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஊதியத்தை உயர்த்துதல், பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். …

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன், பள்ளி வேலை நேரத்தில் தன் அலுவலக அறையில் உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் உள்ள ஓர் அரசு உயர்நிலை பள்ளியில், தலைமை ஆசிரியர் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை தருவதாக பரவலாக புகார் எழுந்தது. எனினும், தலைமை ஆசிரியர் மீது பகிரங்கமாக …

திருச்சியில் இளைஞர் ஒருவரை சக நண்பர்கள் கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. …

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. …

ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபா சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது. கஜகஸ்தான் நாட்டின், பாய்கோர் மாகாணத்தில் உள்ள, ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இதில், 'ஃபெடோர்' என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது. …

கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது கெவின் ஜோசப் - நீனு இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். …

தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டபல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். …

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட் ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமாக வருவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகும். இந்த சீசனுக்கான 139-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்கிறது. …

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. …

தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள ’ஆயிரம் ஜென்மங்கள்’ என்னும் ஹாரர் கலந்த காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். …