Tamil Sanjikai

அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடுகளையம் மிரட்டி வருகிறது அமெரிக்கா, அவர்களையும் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்கிறது. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகளும் இந்த இன்னல்களை எதிர்கொண்டுள்ளன. சிரியா, உக்ரைன் விவகாரம், அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய பிரச்சினைகளாகவும் இருந்து வருகிறது. ஜப்பானில் இம்மாத இறுதியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் டொனால்டு டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையிலான சந்திப்பு நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பேசியுள்ள விளாடிமிர் புதின் பேசுகையில், “இருதரப்பு உறவு கீழ்நோக்கி செல்கிறது, நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment