Tamil Sanjikai

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா 39.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 180 ரன்களை நிர்ணயித்தது.

இதையடுத்து, இந்த எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில், முன்ரோ களமிறங்கினார்கள். ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே முன்ரோவின் விக்கெட்டை பும்ரா எடுத்தார். அதிரடியாக ஆடி வந்த கப்திலின் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார். அப்போது அணியின் ஸ்கோர் 9.4 ஓவர்களுக்கு 37 என இருந்தது.

இதையடுத்து, கேப்டன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அனுபவமிக்க வீரர்களான இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து, அணி வெற்றி பெற உதவி புரிந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 37.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக டெய்லர் 71, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் பும்ரா, ஹர்திக், சாஹல், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்

0 Comments

Write A Comment