Tamil Sanjikai

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வரும் ஜூன் 5-ம் தேதியோடு ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

வளரும் நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக வர்த்தக முன்னுரிமை அளிக்கும் (ஜஎஸ்பி) திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வந்தது. இதன்படி, வளரும் நாடுகள் அமெரிக்காவுக்கு தங்கள் நாட்டில் இருந்து வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்நிலையில், நீண்டகாலமாக இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் வர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து வந்தார். இந்நிலையில் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வரும் ஜூன் 5 ஆம் தேதியோடு ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பொருட்களை எளிதாக, இந்திய சந்தைக்குள் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து எங்களுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை அந்தஸ்தை ரத்து செய்கிறேன் என்றார் டிரம்ப்.

இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பொருட்களுக்கு ஜூன் 5-ம் தேதிக்கு மேல் வரி விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜிஎஸ்பி மூலம் அதிகம் பயன்பெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. தெற்கு ஆசிய நாடுகளிடம் இருந்து சுமார் 5.6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களை இந்தியா வரியின்றி இறக்குமதி செய்து வந்தது.

0 Comments

Write A Comment