ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை செத்தேஸ்வர் புஜாரா முறியடித்துள்ளார்.
மெல்பர்னில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நாதன் லயன் வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்பி புஜாரா சதம் அடித்தார். இது சர்வதேச போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17வது சதம் ஆகும். இதன் மூலம் சவுரவ் கங்குலியின் 16 சதம் என்கிற சாதனையை புஜாரா முறியடித்ததுடன் வி.வி.எஸ் லக்ஷ்மணின் சாதனையை சமம் செய்துள்ளார்.
இதனிடையே பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்கிற பெருமையை புஜாரா பெற்றுள்ளார். இதற்கு முன்பாக சச்சின், சேவாக், ரஹானே, கோலி ஆகியோர் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ள இந்திய வீரர்கள் ஆவர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சை இந்திய அணி 443 ரன்களில் டிக்ளேர் செய்துள்ளது.
0 Comments