நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வரும் வாசிம் அக்ரம், 1997-ம் ஆண்டு முதல் தற்போது வரை இன்சுலின் ஊசியைப் பயன்படுத்தி வருகிறார். எங்கு சென்றாலும் இன்சுலின் ஊசிகள் அடங்கிய பையை எடுத்துச் செல்ல அவர் தவறுவதில்லை.
அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் விமர்சகர்கள் குழுவிலும் அவர் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில், கிரிக்கெட் தொடர் முடிந்து நாடு திரும்புகையில் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தன்னை அதிகாரிகள் அவமானப்படுத்தி விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இன்சுலின் பை தொடர்பாக அதிகாரிகள் நாகரீகமற்ற முறையில் கேள்விகள் எழுப்பியதாகவும், இன்சுலின் ஊசிகளை சிறிய குளிர் பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்து பிளாஸ்டிக் பையில் வைக்குமாறு கண்டித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதை தாம் புரிந்து கொள்வதாகவும், இருப்பினும் அவமானப்படுத்தும் வகையிலா செயல்படுவது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Comments