லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 உயரதிகாரிகளை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பி, கடந்த வாரம் அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய நிதியமைச்சகம் . அதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் 15 வருமான வரித் துறை உயரதிகாரிகள் அதே பாணியில் வீட்டுக்கு அனுப்பியுள்ளது..
இவர்களில், வருமான வரித் துறை முதன்மை ஆணையர் அனுப் ஸ்ரீவத்சவா, ஆணையர் அதுல் தீக்ஷித், பல்வேறு பதவி நிலைகளில் உள்ள முகமது அல்டாஃப், வினய் பிரிஜ் சிங், நளினி குமார், வினோத் குமார் சங்கா உள்ளிட்ட அதிகாரிகள் அடங்குவர்.
இவர்கள் மீது லஞ்சம், ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், சிபிஐ, வருவாய் துறை உள்ளிட்ட அமைப்புகள் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments