Tamil Sanjikai

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண வைபத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்து குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் உடலில் அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

தைப்பூச விழாவையொட்டி, பெரியநாயகி அம்மன் கோயிலில், முத்துக்குமாரசாமி- வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வழிபாடு நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று மாலை தைப்பூசத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இதேபோல, தைப்பூசத் திருவிழாயையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திரளான பக்தர்கள், கடலில் புனித நீராடி முருகனை வழிபட்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment