Tamil Sanjikai

நடிகர் அஜித்- இயக்குநர் சிவா - கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான்.

விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, நடிகர் அஜித் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதை உறுதி செய்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டரில் அஜித்தின் ஒரு கதாபாத்திரத்துக்கு 'தூக்கு துரை' என்று பெயரிடப்பட்டிருப்பதும் உறுதியானது. தற்போது நயன்தாராவின் கதாபாத்திரப் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் விஸ்வாசம் படத்தில் 'நிரஞ்சனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி, படத்தில் வரும் இளம் வயது அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.சமீபத்தில் அஜித்துடன் நயன்தாரா இருப்பதுபோன்ற புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டிருந்ததும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

0 Comments

Write A Comment