கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில், சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் அவருக்கு ஆதரவாக வாக்கு அளித்திருந்தாலும் இது கடந்த ஆண்டை விட 10 விழுக்காடு குறைவாகும்.
எதிர்காலத்தில் சுந்தர் பிச்சை தலைமையில் கூகுளை முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 விழுக்காட்டினர் ஆதரவளித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 10 விழுக்காடு குறைவாகும்
சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள், உத்திகளுக்கு 75 விழுக்காட்டினர் ஆதரவாக உள்ளனர். ஆதரவு அதிகமாக உள்ள போதும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் நம்பிக்கை குறைந்திருப்பது நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.
0 Comments