Tamil Sanjikai

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக பிரித்து ஒப்பந்தம் செய்து அதற்கேத்தாற்போல ஊதியமும் வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் நிர்வாக அமைப்பான பிசிசிஐ, வீரர்களுக்கு 4 பிரிவுகளில் ஊதியம் வழங்கி வருகிறது. ஏ பிளஸ், ஏ, பி, சி என்று நான்கு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஏ பிளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுபோக, ஒவ்வொரு போட்டிகளுக்கும் என தனித்தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏ பிளஸ் பிரிவில் இருந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர், ஏ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது ஏ பிளஸ் பிரிவில் கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஏ பிரிவில் ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், அஸ்வின், புஜாரா, தோனி, குல்தீப் யாதவ், முகம்மது சமி, இஷாந்த் சர்மா, இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். பி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும். உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சகால் உள்ளிட்ட வீரர்களும் பி கிரேடுவில் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு கோடி ஊதியமாக வழங்கப்படும் ”சி” கிரேடில் கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அகமது, ரிதிமான் சஹா ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. சி கிரேடில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

மகளிர் அணியை பொறுத்தவரை, மிதாலி ராஜ், ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிரிதி மந்தனா, பூனம் யாதவ் ஆகியோர் ஏ கிரேடு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும்.

0 Comments

Write A Comment