Tamil Sanjikai

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார் . சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

13-வது கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பிராந்திய பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் மோடி, அதன் பின் சிங்கப்பூர் நிதி நிறுவனமான ஃபின்டெக் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகிறார்.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி - அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 அடுத்த மாதம் தொடங்குகிறது:சிம்பு நடிக்கிறாரா?

கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள்.

ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர். 22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா, இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.

இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலிடமும், கமலின் இளமை தோற்றத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.ஆனாலும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன்-2 படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக தயாராகி வருகிறார்.

0 Comments

Write A Comment