Tamil Sanjikai

பிஃஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சிபிடி என்ற அமைப்பு தீர்மானிக்கிறது. அந்த வகையில் வருங்கால வைப்பு நிதியின் கீழ் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு இதுவரை பிஃஎப் 8.55% வட்டி விகிதமாக இருந்தது.

இந்த நிலையில் 2018- 19 ஆம் ஆண்டிற்கான பிஎஃப் கணக்கின் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஃப் கணக்கின் வட்டி விகிதத்தை உயர்த்தினாலும், போதுமான உபரி நிதி அரசிடம் இருக்கும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தெரிவித்தார். பிஎஃப் கணக்கின் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment