Tamil Sanjikai

வாட்ஸ்ஆப் செயலியை சில ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளதாக செய்திகள் வந்துள்ளதையடுத்து, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்யுமாறு வாட்ஸ்ஆப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகித்து வரும் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப் செயலியை உடனடியாக 'அப்டேட்' செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்கின்றனர்.

வாட்ஸ் ஆப்பில் ஹேக் செய்ய ஹேக்கர்கள் குறிப்பிட்ட எண்களுக்கு கால் செய்தவுடன், அந்த மொபைல் போன்கள் ஹேக் ஆகி விடுகிறது. இதனை தவிர்க்க, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்ய நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

0 Comments

Write A Comment