விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர்.
திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி அருகே சென்று கொண்டிருந்த மினி லாரியின் டயர் வெடித்தது. இதையடுத்து அதனை ஓட்டி வந்தவர்கள் நிகழ்விடத்திலேயே டயர் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு ஆம்னி பேருந்துகள் நிலைதடுமாறி ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்தினால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 Comments