மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 54 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள ஹிடால்கோ மாகாணத்தில் பெட்ரோல் குழாயில் கசிவு ஏற்பட்டது, கசிந்து வெளியேறிய பெட்ரோலை அங்குள்ள பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது.
இந்த விபத்தில் சிக்கி 21 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 54 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக அம்மாகாண ஆளுநர் ஓமர் பயாத் தகவல் தெரிவித்துள்ளார். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பெட்ரோல் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
0 Comments