Tamil Sanjikai

சென்னையில் நடிகரும், இயக்குநருமான ராம்தாஸின் இல்லத்திருமண விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். விழாவின் பொது ஒருவர் செல்போனில் நடிகர் சிவக்குமாரோடு செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருடைய செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டுவிட்டு நடந்து சென்றார்.

இதேபோல் கடந்த ஆண்டு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிவக்குமார் கலந்துகொண்டபோது ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அவருடை செல்போனை சிவக்குமார் தட்விட்டார். இது சமூகவலைளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து செல்போனை தட்டிவிட்ட செயலுக்கு நடிகர் சிவக்குமார் தனது வருத்தம் தெரிவித்ததோடு, அவருக்கு புதிய செல்போனை வாங்கிக்கொடுத்தார். பொதுமக்களும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடுதல், செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றும் சிவக்குமார் வீடியோ ஒன்றை அப்போது வெளியிட்டார்.

தனது செயலுக்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதேபோன்று மீண்டும் செயலில் சிவக்குமார் ஈடுபட்டுள்ளது, சமூகவலைதளத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது.

0 Comments

Write A Comment