அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல்வாரத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் டீசர் இணையத்தில் கசிந்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்கள் இணையத்தில் லீக்கானது. தற்போது படத்தின் டீசரும் இணையத்தில் கசிந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே படத்தில் நடித்த காயத்ரி, விரைவில் டீசர் வெளியாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதைவைத்து பார்க்கும் போது பிகில் பட டீசரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட வேண்டும் என்பதற்காக நெட்டிசன்கள் டீசர் கசிந்துவிட்டதாக வதந்தியைப் பரப்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
0 Comments