மிஷன் சக்தியின் வெற்றியை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அந்த உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட அம்சங்கள் வருமாறு:
* விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா இன்று நிகழ்த்தியுள்ளது
* விண்வெளியில் செயற்கைகோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றியடைந்துள்ளது
* மிஷன்சக்தி என்ற சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
* முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டது.
* இந்தியாவின் செயற்கைகோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல.
* விண்வெளித்துறையில், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
* பூமியை நேரலையில் கண்காணிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது.
* சர்வதேச உடன்படிக்கையை இந்தியா மீறவில்லை.
* நம் செயற்கை கோள்களை பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும்
* அமைதியை உருவாக்குவதே இந்தியாவின் நோக்கம்.
0 Comments