Tamil Sanjikai

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவருடன், பள்ளி வேலை நேரத்தில் தன் அலுவலக அறையில் உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் உள்ள ஓர் அரசு உயர்நிலை பள்ளியில், தலைமை ஆசிரியர் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை தருவதாக பரவலாக புகார் எழுந்தது. எனினும், தலைமை ஆசிரியர் மீது பகிரங்கமாக புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில், அதே பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியைகள், தலைமை ஆசிரியருடன் பள்ளியில் உள்ள அவரது அறையிலேயே தகாத வகையில் நடந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதை அம்பலப்படுத்த நினைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தலைமை ஆசிரியருக்கே தெரியாமல், அவர் சக ஆசிரியையுடன் உறவு கொண்ட செயலை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி, அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த விஷயம் பெரிதாக வெடிக்கவே, கிராம பஞ்சாயத்து தலைவர் இதில் தலையிட்டு, சம்பத்தப்பட்ட தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். எனினும், அந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை இடமாற்றம் மட்டும் செய்வதில் நியாயம் இல்லை என, பெற்றோர் மற்றும் சக ஊழியர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

0 Comments

Write A Comment