ஈற்றின்பொழுது வலியிலும்
சிரித்தாள் பாட்டி...
மகவுகளின் குறும்பில் கோபத்தில்
சிரித்தாள் பாட்டி...
தாத்தாவைப் பார்த்து அரிதாகச்
சிரித்திருப்பாள் பாட்டி...
மக்களின் திருமணத்தில் கண்ணீரோடு
சிரித்தாள் பாட்டி...
பேரப்பிள்ளைகளின் சிரிப்பில் மகிழ்ந்து
சிரித்தாள் பாட்டி...
மருமக்களின் வன்மத்தில்கூட பாட்டி சிரித்திருக்கக்கூடும்...
அனாதை இல்லத்தின் அறையில்
பாட்டியின் சிரிப்பு
மிகுந்த வலியோடிருந்திருக்கக் கூடும்....
உன்பிள்ளைகளைக் கண்டு உலகம் சிரிக்கிறது...
புகைப்படத்தில் பாட்டி சிரித்துக் கொண்டிருக்கிறாள்...
நீ சிரி பாட்டி ! நான் கொஞ்சம் அழ வேண்டும் !
-பிரபு தர்மராஜ்
0 Comments