ஹவுராவில் இருந்து புதுடெல்லி வரை செல்லும் பூர்வா விரைவு ரயில், பிரக்யராஜ்ஜில் இருந்து புறப்பட்டு அதிகாலை 1 மணியளவில் ரூமா என்ற கிராமம் வழியாக செல்லும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.. மருத்துவ உபகரணங்களுடன் விபத்து மீட்பு ரயில் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் ஸ்மிதா வட்ஸ் சர்மா தெரிவித்தார்.
இந்த ரயில் விபத்து காரணமாக கிழக்கு ரயில் பாதையில் இருந்து டெல்லிக்கு வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 45 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரயில் பயணிகள் பேருந்து மூலமாக கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் கான்பூரில் இருந்து டெல்லிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments