கடந்த ஆண்டு இறுதியில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதனையடுத்து இடைக்கால அதிகாரியாக நாகேஷ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டார்.
இப்போது சிபிஐ கூடுதல் இயக்குநர் நாகேஷ்வர் ராவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிகாரப்பூர்வ உத்தரவின்படி சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு பிரிவின் டைரக்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments