Tamil Sanjikai

கேம் சேஞ்சர்’ என்ற பெயரில் அப்ரிடி எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில், ‘37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது தனது வயது 19. மற்றவர்கள் சொல்வது போல் 16 வயது அல்ல என குறிப்பிட்டிருந்தார்..

நான் 1975-ம் ஆண்டு பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக எழுதி விட்டார்கள்’ என்று கூறியுள்ளார். ஆனால் பிறந்த தேதி, மாதம் விவரத்தை சொல்லவில்லை. இந்த நாள் வரை ‘கிரிக்இன்போ’ வீரர்களின் பயோடேட்டாவில் அப்ரிடியின் பிறந்த தேதி 1980-ம் ஆண்டு மார்ச் 1 என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த புத்தகத்தில் இந்திய வீரர் கவுதம் கம்பீர் எந்த ஒரு சாதனையும் புரியவில்லை ,அவர் மனதில் டான் பிராட்மேன் ஜேம்ஸ்பாண்ட் என்ற நினைப்பு உள்ளது என கமபீரை வம்புக்கு இழுத்திருந்தார். இதற்கு கவுதம் கம்பீர், அப்ரிடி ஒரு கோமாளி என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா இலவச விசா அளித்து வருவதாகவும், இங்கு வந்து மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று செல்லுமாறும் கம்பீர் அபிரிடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

0 Comments

Write A Comment