Tamil Sanjikai

தனது வயது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி தனது சுயசரிதையில் தெரிவித்திருக்கும் தகவல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

16 வயதில் சதம் அடித்ததன் மூலம் மிக குறைந்த வயதில் சதம் அடித்தவர் என்ற சாதனைக்கு இன்றளவிழும் தக்கவைத்துளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. இந்நிலையில் 1996ல் நடந்த அந்த போட்டியில் விளையாடும் போது தனக்கு 19 வயது என்று அப்ரிடி தனது சுயசரிதை புத்தகமான கேம் சேஞ்சரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த புத்தகத்தில், தான் 1975ம் ஆண்டு பிறந்ததாகவும், ஆனால் ஐசிசியின் ஆவணங்களில் 1980-ஆம் ஆண்டு பிறந்ததாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் 1975ம் ஆண்டு பிறந்திருந்தால், முதல் போட்டியின் போது அவரது வயது 21ஆகும். எனவே இது கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Write A Comment