Tamil Sanjikai

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு தனமாக மின்சாரம் எடுக்கப்படுவதாக மின்வாரிய அமலாக்கத்துறையினருக்கு ரகசிய தகவலில் கிடைத்தது. அதன்படி, ஜனவரி மாதத்தில் மட்டும், மூன்று கோடியே 90 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தனி நபர்களுக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் தொழில் நிறுவனங்களில் திருட்டு தனமாக மின்சாரம் எடுக்கப்படுவதாக, மின்வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, திருட்டு தனமாக மின்சாரம் எடுக்கப்படுவதை உறுதி செய்தனர்.

இதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில், 509 மின்சார திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் திருட்டு தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டதற்காகவும், தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீது மின்வாரிய சட்டப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருப்பதற்காக என தனித்தனியே அதற்குறிய அபராதத்தையும் சேர்த்து மூன்று கோடியே 90 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

0 Comments

Write A Comment