பிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் அமைச்சர் அளித்த பேட்டியில், பிகில், கைதி திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம். புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திரையங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும்தான் வசூலிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
முன்னதாக, பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் தீபாவளிக்கு சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments