ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும்செயலியான டிக் டாக்கை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்” என்று சட்டசபையில் தமீமுன் அன்சாரி விடுத்த கோரிக்கைக்கு, “டிக் டாக் செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடந்து வருகிறது. விவாதத்தின் மீது இன்று பேசிய எம்.எல்.ஏ, தமீமுன் அன்சாரி, “ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம் பேசி தடை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்க்குப் பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், “ப்ளூ வேல் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதை போல், டிக் டாக் செயலியையும் தடை செய்ய மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பு மக்களும் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். புளுவேல் சர்வர் எப்படி ரஷ்யாவில் இருந்ததோ அதை தடை செய்ய மத்திய மூலம் நடவடிக்கை எடுத்தது போல டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
0 Comments