Tamil Sanjikai

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையானதை தொடர்ந்து, மேலும் 52 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 56 ஆயிரத்து 750 டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணல், பொதுப்பணித்துறை உருவாக்கிய இணையதளம் மூலமாகவும், TNSAND என்ற செல்போன் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு யூனிட்டின் விலை 10 ஆயிரத்து 350 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட மணலில் 95 சதவீதம் விற்பனையாகிவிட்டது. இதையடுத்து, 2ஆம் கட்டமாக மேலும் 52 ஆயிரம் டன் மலேசிய மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இது நவம்பர் 20-ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்தை வந்தடையும் என்றும், அதன்பிறகு முன்பதிவு தொடங்கி, விற்பனை நடைபெறும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment