வங்கிகளில் வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்த தயார் என விஜய் மல்லையா மீண்டும் கூறியுள்ளார்.
வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடனை பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து சென்று தஞ்சம் புகுந்தார் விஜய் மல்லயா.இதுகுறித்த வழக்கில் அவரை நாடு கடந்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மல்லையா அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில் அவர், வங்கிகளில் பெற்ற கடன் முழுவதையும் திருப்பி செலுத்த தயார் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ள அவர், இது போன்றே தமது கிங்பிஷர் விமான நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் நஷ்டமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
தொழில் நஷ்டத்தை சந்தித்த தமக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடனாக பெற்ற தொகையை முழுமையாக திருப்பி செலுத்த தயாரென குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை திருப்பி செலுத்த முன்வந்தாலும் வங்கிகள் அதனை ஏற்க மறுப்பது ஏன் என மல்லையா கேள்வி எழுப்பி உள்ளார்.
0 Comments