இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 94வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டிச் சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் திரு நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு ஆகியோரும் இருந்தனர்.
இதேபோல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோரும் நல்லகண்ணு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
0 Comments