Tamil Sanjikai

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 11 பேருக்கு ஒரே நாளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையை இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 25 இந்தியர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 21 ஆம் தேதி மட்டும் 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் கடைசி வாய்ப்பாக வங்கி கணக்கு விவரங்களை பகிரக்கூடாது என்பதற்கான உரிய ஆதாரத்துடன் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பதாக கிருஷ்ணபகவான் ராம்சந்த், கல்பேஷ் ஹர்ஷத் கினரிவாலா உள்ளிட்ட இந்தியர்களின் பெயர்கள் ஏற்கனவே கசிந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment