Tamil Sanjikai

பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்துவரும் மஞ்சளாடைப் போராட்டத்தின் விளைவாக சட்டப்பூர்வ குறைந்தபட்சக் கூலியை உயர்த்தவும், வரிச்சலுகைகள் அளிக்கவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங் ஒப்புக்கொண்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், வாழக்கைச் செலவுகள் அதிகரிப்பது உள்ளிட்ட பிற பிரச்சினைகளையும் முன்னிறுத்தியது.

தொலைக்காட்சி வழியாக இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய மக்ரோங் வன் செயல்களைக் கண்டித்தார். அதே நேரம்,போராட்டக்காரர்களின் கோபம் ஆழமானது, பலவழிகளில் நியாயமானது என்றும் , 2019-ஆம் ஆண்டு முதல் குறைந்தபட்சக் கூலி மாதம் 100 யூரோ அதிகரிக்கும் என்றார் அவர். குறைந்த ஓய்வூதியங்களின் மீதான வரிவிதிப்பை அதிகரிக்கும் திட்டம் கைவிடப்படும். அதைப்போல ஓவர்டைம் செய்வதற்காகப் பெறும் ஊதியத்துக்கு இனி வரிவிதிக்கப்படமாட்டாது. இது தவிர, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வரியில்லா ஆண்டு இறுதி போனஸ் வழங்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று மக்ரோங் தெரிவித்தார். அதே நேரம் பணக்காரர்கள் மீதான ஒரு வரியை மீண்டும் விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை மக்ரோங் நிராகரித்தார். இது நம்மை பலவீனப்படுத்திவிடும். நாம் வேலைகளை உருவாக்கியாகவேண்டும் என்று அவர் கூறினார்.

0 Comments

Write A Comment