அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாநிலத்தில் உள்ள ஸ்டெம் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் 18 வயதுடைய ஒரு மாணவன் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது..
காயமடைந்த மாணவர்கள் ஹைலேண்ட் ரஞ்ச்சில் உள்ள நார்த்ரிட்ஜ் ரைசிங் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்த தகவலறிந்த நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பள்ளிக்கு முன் கூடினர். சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் மற்றும் இளைஞரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், கைத்துப்பாக்கி ஒன்றை சம்பவ இடத்திலிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments