Tamil Sanjikai

இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது.

மேரி கோம், எம் எஸ் டோனி, சச்சின், மில்கா சிங் என பல விளையாட்டு வீரார்கள் மற்றும் வீராங்கனையின் வரிசையில் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பட தயாரிப்பாளர்கள் பேசினர். அவரும் நடிக்க சம்மதம் சொல்லி இருக்கிறார். தனது வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதற்கு பி.வி.சிந்து வாழ்த்தும், நன்றியும் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மாறுபட்ட கருத்து கூறி அதிர்ச்சி தந்திருக்கிறார்.

‘உங்கள் வாழ்க்கை கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்று பி.வி.சிந்துவிடம் கேட்டபோது,’எனது வாழ்க்கை கதையில் சமந்தா வைவிட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் அவரும் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை.

ஆனாலும் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை பட தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.

0 Comments

Write A Comment