இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ (BCCI - Board of Control for Cricket in India) ஆலோசனைக் குழுவிலிருந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி, விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனைக் குழு உறுப்பினராக பதவி வகித்துவரும் கங்குலி, ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றிவருகிறார்.இதனால், ஒரே நேரத்தில் இரு பதவிகளை அவர் வகித்துவருவதாக பலரும் குற்றம் சாற்றி வந்தனர்.
இதையொட்டியே பிசிசிஐ ஆலோசகர் பொறுப்பில் இருந்து கங்குலி விலக முடிவு எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
0 Comments