Tamil Sanjikai

பாபர் மசூதி கடந்த 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ந்தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரை ரேபரேலி நீதிமன்றம் விடுதலை செய்தது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ., உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

அப்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது வருகிறது.

இந்நிலையில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தொடர்பான வழக்கை கீழ் நீதிமன்றம் 9 மாதத்தில் விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment