இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது , இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை குவித்தது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் -89, மார்கன் (கேப்டன்) - 57, ஜேசன் ராய் 54 ரன்களை எடுத்தனர்.
312 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 39.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, டி காக் -68, துசான் -50 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில், ஆர்சர் 7 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
0 Comments