Tamil Sanjikai

மும்பையில் உயர்தர ஓட்டல்கள் உட்பட பெரும்பாலான ஓட்டல்கள், சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து அவர்கள் மும்பையில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, சுத்தமான குடிநீர், கழிவறை, ஊழியர் உடல் தகுதி உள்ளிட்ட 50 விதிமுறைகளை ஓட்டல் நிர்வாகங்கள் பின்பற்றுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது..

அதில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட 442 ஓட்டல்களில், 327 ஓட்டல்கள் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெரும்பாலான ஓட்டல்களில் சமையல் அறைகள் அசுத்தமாக காணப்பட்டன. இதையடுத்து அந்த 327 ஓட்டல்களுக்கும் விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

0 Comments

Write A Comment