ஏர் இந்தியா துணை நிறுவனத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 55,000 கோடிக்கு மேல் கடன் சுமையில் சிக்கி தவித்து வருகிறது. இந்தநிலையில் இதில் இருந்து மீட்க இந்த நிறுவன சொத்துக்களை விற்று மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏ.ஐ.ஏ.டி.எஸ்.எல் நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. அனைத்து நிறுவனங்களின் விமானங்களை சீர் செய்வது, பராமரிப்பது பொறியாளர் சேவை வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஏஐ..ஏடி..எஸ்.எல் ஈடுபட்டு வருகிறது.
இதை தவிர்த்து, ஏர் இந்தியாவின் விமான தரையிறக்க நடவடிக்கைகள், வருகை, புறப்பாடு, சரக்கு பரிமாற்றம் ஆகியவற்றையும் இந்த நிறுவனம் கையாள்கிறது. இந்த நிறுவனம் லாபம் ஈட்டி வந்த நிலையில், இவற்றின் பங்குகளை விற்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பங்கு விற்பனை முடிவடையும் என மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தகவல் பரவுகிறது.
0 Comments