கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீரானது திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியே மேட்டூர் அணையை வந்தடைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது. இந்நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்து உள்ளது. பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments