பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பயணிகள் ஆதரவு இல்லாததால் நஷ்டத்தில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், மெட்ரோ ரயிலில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 19,000 பேர் பயணிக்க வேண்டிய நிலையில், 2016-17ம் ஆண்டுகளில் சராசரியாக 10,964 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளதாகவும், 2017-18ம் ஆண்டுகளில் 23 ஆயிரத்து 307 பேர் பயணம் செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 229 கோடியே 64 லட்ச ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விளம்பரம், ஆலோசனை கட்டணம் என ஐந்து கோடியே 44 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் கட்ட திட்டம் வெற்றி பெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
0 Comments