இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீர் ஓட்டத்தை திருப்பி விட்டு, நம் விவாசிகள் மற்றும் தொழில்துறை பயன்பெறும் வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர், கஜேந்திர ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சிந்து நதியிலிருந்து பெரும்பாலான நீர் பாகிஸ்தானுக்கு செல்கிறது. இவற்றில் பெரும் பகுதி இந்தியாவுக்கு சேர வேண்டியது. மிகுதி நீர் பாய்வதை தடுத்து அதை மடை மாற்றி நம் பக்கம் திருப்புவதன் மூலம், நம் விவசயிகள், தொழில்துறையினர் பயனடைவர். அது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது" என்றார்.
0 Comments