கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உள்பட 2 தனியார் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்து அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தவும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த இரு நிறுவனங்களை பற்றிய விவரங்களை மத்திய அரசிடம் அளிப்பதற்கு சுவிஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள ஒரு அரசாணையில் மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிட்டட் நிறுவனம் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆதி என்டர்பிரைசஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றில் முக்கிய பொறுப்பு வகிக்கும் சிலரின் விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட விவரங்களை இந்திய அரசுக்கு அளிக்க நிர்வாக ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் சுவிஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித்துறை ஒப்புக்கொண்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
0 Comments