சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து கேரளாவில் போராட்டம் தொடர்கிறது. கடந்த 5-ம் தேதி சிறப்பு பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டது, அப்போது இருமுடிக்கட்டு இல்லாமல் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினர் சங்கர்தாஸ் என்பவர் 18-ம் படியில் ஏறியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு உறுப்பினராக பதவியேற்றப் போது இந்துமத வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதாக மேற்கொண்ட உறுதியளிப்பை சங்கர்தாஸ் மீறிவிட்டார் என்றுக் கூறி சங்கர்தாஸுக்கு எதிராக முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இருமுடிக்கட்டு இல்லாமல் 18-ம் படிகளில் ஏறக்கூடாது என்பது சங்கர்தாஸுக்கு தெரியும், இது கோவிலின் பாரம்பரியமான கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை மீறுவதாகும். கேரள ஐகோர்ட்டின் உத்தரவை நேரடியாக சங்கர்தாஸ் மீறியுள்ளார், தவறாக நடந்துக்கொண்ட அவரை நீக்கம் செய்யலாம் என கோபாலகிருஷ்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பரபரப்பாக காணப்படும் சபரிமலை விவகாரத்தில் இப்போது புதிய சர்ச்சைக் கிளம்பி இருக்கிறது.
0 Comments