2018- ம் ஆண்டின் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் சர்கார் படம் முதலிடத்தை பெற்றிருக்கிறது. முதல் பத்து இடங்களை தென்னிந்திய சினிமாக்கள் கைப்பற்றியிருக்கின்றன.
2018-ம் ஆண்டு இன்னும் 25 நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற அரசியல் நகர்வுகள், வெளியான முக்கிய திரைப்படங்கள், அதற்கான கொண்டாட்டங்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோர் பேசுபொருளாக்கியுள்ளனர். இந்தநிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டான முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது தென்னிந்திய சினிமா. அதில் முதலிடத்தில் இருப்பது சர்கார். இந்தப் படத்தின் மீதான எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் இதற்கு முக்கிய காரணம். சர்கார் படத்தை அடுத்து விஸ்வாசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் பரத் அனே நேனு, 4. அரவிந்த சமேதா, 5. ரங்கஸ்தலம், 6. காலா ஆகிய படங்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன. மேலும், ட்விட்டரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தருணங்களில் சர்கார் படம் முதலிடம் பிடித்துள்ளது. அதையடுத்து #METOO இயக்கம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் முதல் 10 இடங்களில் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தபடியாக ராகுல்காந்தி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.
0 Comments