உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் இடம் பெற்றிருந்தார். 3 உலக கோப்பாய் போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்து இருந்தார்.
இந்த நிலையில், பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விஜய் சங்கர் உலக கோப்பை தொடரில் இருந்து விளக்கியுள்ளதாக தெரிகிறது. விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
0 Comments