தொடர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்ததால் 5 வயது சிறுமியை அவளின் தாய் அடித்ததில், அச்சிறுமி உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் ஒரு வீட்டில் 5 வயது சிறுமி தொடர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். இதனால் கோபமடைந்த அச்சிறுமியின் தாய் அவரை அடித்ததுடன், ஒரு மணி நேரம் வெயிலில் நிற்கவும் வைத்துள்ளார். இதனால் அச்சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியையுமான நித்ய கமலாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments