Tamil Sanjikai

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 23 பலியானதை அடுத்து, தடை விதிக்கப்பட்ட ட்ரெங்கிங்-க்கு தற்போது மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற 23 பேர் பலியான சம்பவம் தமிழகம் மற்றுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, அங்கு டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விபத்து நடந்த 8 மாதத்திற்கு பின் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேசன் வரை அனுமதிக்கப்பட்ட பகுதியில் மலையேற்றம் செய்ய போடி வனச்சரகருக்கு விண்ணப்பித்து மாவட்ட வன அலுவலரின் ஒப்புதலைப் பெற வேண்டும். காலை 8 மணி முதல் 5 மணி வரை மட்டுமே மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

0 Comments

Write A Comment