கொச்சியில் உள்ள சிறுவர்கள் விடுதியில் இயக்குநராக பணியாற்றிய பாதிரியார் ஜார்ஜ் டி.ஜே, என்ற ஜெர்ரி, அங்கு தங்கி படிக்கும் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 6 மாத காலமாக இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்ட போது இத்தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
சிறுவர்கள் விடுதியில் இருந்து விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். மாலை 6 மணிக்கு மேல் விடுதிக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்போது மாணவர்கள் பேசிய போது பாதிரியாரால் நடந்த கொடூரம் வெளியே தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர்களிடம் மாணவர்கள் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பெற்றோர்கள் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிரியார் ஜெர்ரியை கைது செய்துள்ளனர்.
0 Comments